ஈரோடு மாவட்டத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது
Money Fraud Complaint -சிறுவலூரில் சீட்டாட்டம்; 5 பேர் கைது
கோபி அடுத்த சிறுவலூர் பகுதியில் உள்ள காஸ்மோ தியேட்டர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து சிறுவலூர் போலீசார் அங்கு சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு டீக்கடையின் பின்புறம் உள்ள ஷெட்டில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சிறுவலூர் கோபாலபுரத்தை சேர்ந்த துரைசாமி (33), வெள்ளிங்கிரி (55), ரவிச்சந்திரன் (48), வெள்ளக்கோயில் எல்லபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (60), சிறுவலூர் கோல்டன் சிட்டியை சேர்ந்த தமிழரசு (58) ஆகிய 5 பேர் மீது போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 7 ஆயிரத்து 10 ரூபாயை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் சீட்டாட்டம்; 5 பேர் கைது
கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் சீட்டு சூதாட்டம் நடப்பதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நஞ்சகவுண்டம்பாளையம் சாவடிதெருவில் உள்ள ஒரு வீட்டில் சீட்டாட்டம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (62), முத்துசாமி (50) , பழனிச்சாமி (65), லட்சுமணன் (62), நஞ்சகவுண்டம்பாளையம் வெங்கியம்மன் தெருவை சேர்ந்த மூர்த்தி (63) ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,350 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சித்தோடு பகுதியில் சீட்டாட்டம்; 4 பேர் கைது
சித்தோடு அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சித்தோடு போலீசார் அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாமரத்துபாளையம் அம்மன்நகரில் உள்ள கறிக்கடை முன்பு 4 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தாமோதரன் (36), சண்முகம் (47), குமார் (39), முத்து (51) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1,200 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் சேவல் சண்டைசூதாட்டம்; 5 பேர் கைது
கோபி அருகே உள்ள காசிபாளையம் சித்தேஸ்வரன்மேடு பவானி ஆற்றங்கரை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 2 சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பாபு (33) , ஆகாஷ் (23) , கார்த்தி , சதீஸ், சுரேஷ் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து 150 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.9,710-யை பறிமுதல் செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu