கோபி அருகே டாஸ்மாக்கில் ரூ.1.87 லட்சம் காெள்ளை: விற்பனையாளர் கைது

கோபி அருகே டாஸ்மாக்கில் ரூ.1.87 லட்சம் காெள்ளை: விற்பனையாளர் கைது
X

கடையின் விற்பனையாளர் சண்முகம்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியாம்பாளையம் மதுக்கடை கொள்ளை வழக்கில் கடையின் விற்பனையாளர் நாடகமாடியது அம்பலம்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசூர் இண்டியம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கடை கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையில் விற்பனையாளராக சத்தியமங்கலத்தை சேர்ந்த சண்முகம், அருண் ராஜ், சரவணன், மாரிமுத்து ஆகியோரும், விண்ணப்பள்ளியை சேர்ந்த சந்திரசேகர் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று விற்பனையான ரூ.1.87லட்சம் ரூபாய் தொகையை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துவிட்டு சண்முகம் சென்றுள்ளார்.

இதனையடுத்து, மறுநாள் காலை மதுக்கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, அப்பகுதியில் உள்ள ஒருவர் சண்முகத்திடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சண்முகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கோபிசெட்டிபாளையம் டிஎஸ்பி ஆறுமுகம், கடத்தூர் இன்ஸ்பெக்டர் சணமுகவேலு மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா.அதனைத் தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் கடையின் இருப்புகளை சரிபார்த்த போது, கடையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தியதில், கடையின் விற்பனையாளர் சண்முகமே கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில், கடையின்‌ விற்பனையாளர் சண்முகம் கடந்த 7ம் தேதி இரவு விற்பனை தொகை ரூ.1.87 லட்சத்தை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர், நள்ளிரவில் சண்முகமும் மற்றாெருவரும் சேர்ந்து வந்து பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் போது, சிசிடிவி கேமராவில் தெரியவே சண்முகம் மது பாட்டில்களை மட்டும் திருடிவிட்டு பின்னர், சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு, வயர்களை அறுத்து விட்டும் சென்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் விசாரணையில், சண்முகம் கடையில் இருப்புகளை சரிபார்ப்பது போல் நடித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் சண்முகத்தை கைது செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றாெரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். மதுக்கடை விற்பனையாளரே கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!