பூதப்பாடியில் ரூ.18.62 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

பூதப்பாடியில் ரூ.18.62 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
X

விற்பனை கூடத்திற்கு கொண்டு வரப்பட்ட வேளாண் விளைபொருட்கள்.

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.18.62 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

பவானி அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இங்கு விற்பனைக்கு வந்த 10 ஆயிரத்து 79 தேங்காய்களில் சிறியவை 5.17 ரூபாய் முதல் 12.19 ரூபாய் வரை 92 ஆயிரத்து 420 ரூபாய்க்கும், 49 மூட்டை தேங்காய் பருப்பு கிலோ 69.16 முதல் 83.59 வரையில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 471 ரூபாய்க்கும்,639 மூட்டைகள் நிலக்கடலை கிலோ 65.24 ரூபாய் முதல் 68.14 வரையில் 15 லட்சத்து 24 ஆயிரத்து 401 ரூபாய்க்கும் ஏலம் போனது.

மேலும், 3 மூட்டைகள் எள் கிலோ 65.39 ரூபாய் முதல் 66.69 ரூபாய் வரையில் 9 ஆயிரத்து 99 ரூபாய்க்கும், 117 மூட்டைகள் நெல் கிலோ 12.55 ரூபாய் முதல் 19.32 வரையில், 1 லட்சத்து 29 ஆயிரத்து 255க்கும் விற்பனை மொத்தம் 289 மூட்டைகள் 15766 குவிண்டால் எடையுள்ள வேளாண் விளை பொருட்கள் 7 லட்சத்து 94 ஆயிரத்து 104க்கு விற்பனையானது. நேற்றைய வர்த்தகத்தில் 808 மூட்டைகளில் 387 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 18 லட்சத்து 61 ஆயிரத்து 646 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!