ஈரோடு மாவட்டத்தில் 18 ஆயிரம் டன் உரம் கையிருப்பு: இணை இயக்குநர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 18 ஆயிரம் டன் உரம் கையிருப்பு: இணை இயக்குநர் தகவல்
X

யூரியா உரம் 1500 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 300 டன் சென்னையிலிருந்து ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் 18 ஆயிரம் டன் உரங்கள் கையிருப்பு உள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் 18 ஆயிரம் டன் உரங்கள் கையிருப்பு உள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நடவு பணிகள் நடந்து வருகிறது. தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதிகளில் மானாவாரி மக்காச்சோளமும், மற்ற பகுதிகளில் நிலக்கடலை, கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிர்களுக்கு தட்டுபாடின்றி உரம் விநியோகம் செய்ய வேளாண் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் இருந்து உரங்களை கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில், சென்னை மெட்ராஸ் பெர்ட்டிலைசர் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய் யப்பட்ட 1,500 டன் யூரியா, 300 டன் காம்ப்ளக்ஸ் உரம் தனி சரக்கு ரயில் மூலமாக ஈரோட்டிற்கு வந்தது. இதனை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து உர மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றி வேளாண் துறைக்கு சொந்தமான குடோன் மற்றும் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 991டன் யூரியா உரம், 1,723 டன் டி.ஏ.பி உரம், 1,264 டன் பொட்டாஷ் உரம், 10 ஆயிரத்து 192 டன் காம்ப்ளக்ஸ் உரம், 867 டன் சூப் பர் பாஸ்பேட் என மொத்தம் 18.037 டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் விநியோகம் செய்வதற்காக போதுமான அளவு உரம் இருப்பு உள்ளது. உர விற்பனை நிலையங்களில் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது. மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும். உர விநியோகம் தொடர்பாக குறைகள் இருந்தால், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு தகவல் தெரிக்கலாம்.

மேலும், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த லாம். திண்டலில் உள்ள வேளாண்மை துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து, அங்கு பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங் களைபெற்று பயன்படுத்தி உரச்செலவை குறைத்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ஈரோடு மாவட்டத்திற்கு தட்டுப்பாடின்றி யூரியா உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்த தமிழக முதலமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை இயக்குநர், மாவட்ட கலெக்டர், வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) ஆகியோர்களுக்கு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது