ஈரோட்டில் ரேஷன் அரிசியை கடத்திய 175 பேர் கைது: போலீசார் அதிரடி

ஈரோட்டில் ரேஷன் அரிசியை கடத்திய 175 பேர் கைது: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

கடந்த 9 மாதத்தில் ரேஷன் அரிசியை கடத்தியதாகவும், பதுக்கி வைத்ததாகவும் என மொத்தம் 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக வெளிமாநிலங்களுக்கு குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி அதை கடத்தி சென்று வெளிமாவட்டங்களுக்கு, வெளி மாநிலங்களுக்கு அதிக விலையில் விற்று வருகின்றனர். இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் பல்வேறு பகுதியில் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர்கள், வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஈரோடு மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசியை கடத்தியதாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் ஜனவரி முதல் செப்டம்பர் வரை இடையிலான காலகட்டத்தில் ரேஷன் அரிசியை கடத்தியதாகவும், பதுக்கி வைத்ததாகவும் என மொத்தம் 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 50 டன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் 15, கார், லாரிகள் 20 என மொத்தம் 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!