ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 173 பேர் வேட்புமனு தாக்கல்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 173 பேர் வேட்புமனு தாக்கல்.
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 109 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 173 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி ,42 பேரூராட்சி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 28ந்தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கி வரும் 4ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 6 பேரும், நகராட்சியில் 13 பேரும், பேரூராட்சியில் 90 பேரும் என 109 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை 735 பதவிகளுக்கு 173 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி, பவானிசாகர் மற்றும் கெம்பநாயக்கன்பாளையம் ஆகிய பேரூராட்சியில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை,

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!