கொடிவேரி தடுப்பணையில் குவிந்த 17 ஆயிரம் சுற்றுலா பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில்  குவிந்த 17 ஆயிரம் சுற்றுலா பயணிகள்
X

கொடிவேரி அணை(பைல் படம் ).

தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்களாக கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் வந்து குவிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமான பொது மக்கள் வருவார்கள். மேலும் விடுமுறை நாட்களில் இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். இதனால் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள்.

இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்களாக கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் வந்து குவிந்தனர். கடந்த 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு, நேற்றுமுன் தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என தெடர்ந்து 3 நாட்கள் கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கொடிவேரி பகுதியில் கடந்த 3 நாட்களாக எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாக இருந்து வந்தது. இதே போல் நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்க த்தை தணிப்பதற்காக இளை ஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக காணப்ப ட்டதால் குழந்தைகளை அழைத்து வந்த பொது மக்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் தடுப்பணையில் ஓரமாக நின்று குளித்து விட்டு சென்றனர். இதை யொட்டி ஏராமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர். இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 17 ஆயிரத்து 500 பேர் கெடிவேரிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் ரூ.87 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future