அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.16.34 லட்சத்துக்கு துவரை ஏலம்

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.16.34 லட்சத்துக்கு துவரை ஏலம்
X

துவரை பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த துவரை ஏலத்தில் ரூ.16.34 லட்சம் ரூபாய்க்கு துவரை விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு, அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் துவரம் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் ஒரு கிலோ துவரை அதிகபட்சமாக 58 ரூபாய் 75 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக 47 ரூபாய் 19 பைசாவிற்கும், சராசரியாக 53 ரூபாய் 69 பைசாவிற்கும் விற்பனையானது.

மொத்தம் 404 மூட்டைகள் துவரை கொண்டு வரப்பட்ட நிலையில், 16 லட்சத்து 33 ஆயிரத்து 895 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!