ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.71 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.71 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
X
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15.76 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 15 லட்சத்து 76 ஆயிரத்து 241 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர்.இதேபோல், கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 10 லட்சத்து 94 ஆயிரத்து 793 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். மாவட்டத்தில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை மொத்தம் இதுவரை 26 லட்சத்து 71 ஆயிரத்து 034 பேர் செலுத்திக்கொண்டுள்ளனர்.

மாவட்டத்தில் தினமும் 6ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருந்தாலும் தினமும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 24 லட்சத்து 24 ஆயிரத்து 623 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!