ஈரோட்டில் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்ட 15 பேர் போலீசில் ஒப்படைப்பு

ஈரோட்டில் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்ட   15 பேர் போலீசில் ஒப்படைப்பு
X

ஈரோடு வடக்கு காவல் நிலையம் (பைல் படம்).

ஈரோட்டில் மத மாற்ற பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட 15 பேர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கப் பட்டனர்.

ஈரோடு சூளை ஈ.பி.பி. நகர் ஜனதா காலனியில் நேற்று மாலை ஒரு வேனில் வந்த 15 பேர் கொண்ட குழுவினர், வேனில் இருந்து இறங்கி பள்ளி மாணவ, மாணவிகள், வீடுகள், கடைகள் மற்றும் நடந்து செல்வோரிடம் கிறிஸ்துவ மதம் தொடர்பான புத்தகங்களை இலவசமாக விநியோகித்தனர். மேலும் கிறிஸ்தவ மதத்தின் பெருமைகளை கூறி மதம் மாற பிரசாரம் செய்தனர்.

இதுகுறித்த தகவல் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற நிர்வாகிகள் மதம் மாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை முற்றுகையிட்டனர். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம் 15 பேரையும் ஒப்படைத்தனர். இதை அடுத்து போலீசார் 15பேரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெபக்கூட பாதிரியார்கள், சூளை ஈ.பி.பி நகரை சேர்ந்த பாதிரியார் ஒருவர் வீட்டிற்கு ஜெபம் செய்ய வந்துள்ளனர். அப்போது மத புத்தகங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். மேலும் வேனில் 20 அட்டை பெட்டிகளில் வைத்திருந்த 6 ஆயிரம் மத புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil