ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்: 14,200 பேர் விண்ணப்பம்

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்: 14,200 பேர் விண்ணப்பம்

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மேற்கு, கிழக்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டசபை தொகுதியில், 9 லட்சத்து 57 ஆயிரத்து 515 ஆண்கள், 10 லட்சத்து 8 ஆயிரத்து 913 பெண்கள், 118 திருநங்கைகள் என 19 லட்சத்து 66 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைனிலும், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், ஓட்டுச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.

அத்துடன் நவம்பர் 13, 14, 20, 21, 27, 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடியிலும் நடத்தப்பட்டது. கடந்த 25 நாட்களில், 12 ஆயிரத்து 400 பேர் சிறப்பு முகாமிலும், ஆன்லைன் மூலமும் புதிதாக விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 2 ஆயிரம் மனுக்கள் பெயர் நீக்கம், விலாசம் மாற்றம், திருத்தம், தொகுதி மாற்றம் ஆகியவற்றுக்காக வழங்கி உள்ளனர்.

Tags

Next Story