ஈரோட்டில் இந்திய தேசிய காங்கிரசின் 137- ம் ஆண்டு துவக்க விழா

ஈரோட்டில் இந்திய தேசிய காங்கிரசின் 137- ம் ஆண்டு துவக்க விழா
X

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடைபெற்ற 137 வது துவக்க விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள். 

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்திய தேசிய காங்கிரசின் 137வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, இந்திய தேசிய காங்கிரசின் 137வது ஆண்டு துவக்க விழா இன்று காலை ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி இந்திய தேசிய காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ. ஆர். ராஜேந்திரன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சுரேஷ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்களான ராஜேஷ் ராஜப்பா, புனிதன், பாபு என்கிற வெங்கடாஜலம், அம்மன் மாதேஸ்வரன், செல்வம், அரவிந்தராஜ், மண்டல தலைவர்களான அய்யூப் அலி, திருச்செல்வம், விஜயபாஸ்கர் பொதுச் செயலாளர்களான கண்ணப்பன், கனகராஜ், வின்சென்ட், கராத்தே யூசுப் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, மகிளா காங்கிரஸ் நிர்வாகி சுதா, தேசிய தொழிலாளர் காங்கிரஸ் மாநகரத் தலைவர் கிருஷ்ணவேணி, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர் ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பிரகாஷ், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைகள் மற்றும் சட்டத்துறை தலைவர் வினோத் மாரியப்பா, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் மாரிமுத்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் முகமது அர்சத், மாவட்ட நிர்வாகிகளான டிட்டோ, சிவா என்கிற சிவகுமார், முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, முன்னாள் சூரம்பட்டி கவுன்சிலர் சாம்ராட் அசோக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!