ஆப்பக்கூடல்: செங்கல் சூளையில் 13 வயது வடமாநில சிறுமி தூக்கிட்டு தற்கொலை

ஆப்பக்கூடல்: செங்கல் சூளையில் 13 வயது வடமாநில சிறுமி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

Suicide News India - போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

Suicide News India -ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆப்பக்கூடல் சுக்காநாயக்கனூரில் அய்யப்பன் என்பவரது செங்கல் சூளையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் மேற்கு வங்காள மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட ராகுல்அமீன்மோலா(வயது 34) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் பாத்திமா (வயது 13) திடீரென நேற்று இரவு செங்கல் சூளையில் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து குடும்பத்தினர் பாத்திமாவை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமி பாத்திமா கடந்த நான்கு வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக கொல்கத்தாவில் உள்ள மசூதியில் தாயத்து கட்டி வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு தங்கிருந்த இடத்தில் சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!