அந்தியூர் அருகே பள்ளி மாணவி மாயம்

அந்தியூர் அருகே பள்ளி மாணவி மாயம்
X

பைல் படம்.

அந்தியூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கெட்டி சமுத்திரம் ஜெ.ஜெ. நகரரை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி சின்னதாயி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர்களது 2-வது மகள் நந்தினி (வயது 16). இவர் ஆலாம்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அழகேசன் மற்றும் அவரது மனைவி இருவரும் வழக்கம் போல் காலை வேலைக்கு சென்றனர். வீட்டில் நந்தினி மட்டும் இருந்து வந்தார்.

இந்நிலையில், நந்தினி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இரவு வேலை முடிந்து அழகேசன் அவரது மனைவி வீட்டுக்கு வந்தனர். அங்கு மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதுகுறித்து அழகேசன் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்