கொடுமுடியில் 12-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

கொடுமுடியில் 12-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
X

பைல் படம்.

கொடுமுடி அருகே 12-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் சவுமியா (வயது 17). இவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெளியங்காட்டுப்புதூரில் உள்ள தனது பெரியப்பா ரவி என்பவரது வீட்டில் தங்கி அரசு மகளிர் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி சவுமியாவை அவரது பெரியப்பா வீட்டு வேலைகளை கற்று கொள்ள வேண்டும் என்று கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மாணவி சவுமியா கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாயமானார். இந்நிலையில், வீட்டில் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து சவுமியா தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த கொடுமுடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!