கோபிசெட்டிபாளையம் அருகே 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள கோட்டுபுள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். பனியன் கம்பெனியில் கூலி வேலை. இவருக்கு யுவராணி, மலர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் மலர் (வயது 19) கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், சீனிவாசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு பர்கூர் சென்று விட்டனர். அப்போது, வீட்டில் மாணவி மலர் தனியாக இருந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் மாணவி மலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, அவரது அக்காள் யுவராணி மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, நம்பியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu