ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 27வது பட்டமளிப்பு விழா: 1,281 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கிய போது எடுத்த படம். உடன், கல்லூரி நிர்வாகிகள் உள்ளனர்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இன்று (டிச.28) நடந்த 27வது பட்டமளிப்பு விழாவில் 1,281 மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.
ஈரோடு திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 27 வது பட்டமளிப்பு விழா இன்று (டிச.28) சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தர வரிசையில் சிறப்பிடம் பெற்ற 73 மாணவர்களுக்கு பதக்கத்துடன் பட்டமும், 1,208 மாணவர்களுக்குப் பட்டமும் என மொத்தம் 1,281 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
தொடர்ந்து, நடைபெற்ற விழாவில் அவர் பேசுகையில், மாணவர்கள் கற்கும் கல்வி வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும். தாங்கள் கற்ற கல்வி தங்களுக்கு மட்டுமல்லாது சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் பணியாற்றிட வேண்டும்.
பெற்றோர்கள் சொல் கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு பயிலும் காலத்தில் வளர்த்துக் கொண்ட தனித் திறன்கள் வாயிலாக அனைவரும் சிறந்து விளங்க வேண்டும். உயர்கல்வி வாய்ப்புகளை பயன்படுத்துவதோடு தொழில் முனைவோராக உருவாகி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று பேசினார்.
விழாவில், கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் ஆர். குமாரசாமி, செயலாளர் பி.சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.வீ. ரவிசங்கர், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல்,கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா, கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலர்கள் பி.சி.பழனிசாமி, கே.செங்குட்டுவேலன் மற்றும் கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களை வாழ்த்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu