ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.4ம் தேதி) 12 மையங்களில் நீட் தேர்வு: 4,162 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.4ம் தேதி) 12 மையங்களில் நீட் தேர்வு: 4,162 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்!
X
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.4) நடக்கவுள்ள நீட் தேர்வுக்காக 12 மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 4,162 மாணவ, மாணவிகள் இத்தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.4) நடக்கவுள்ள நீட் தேர்வுக்காக 12 மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 4,162 மாணவ, மாணவிகள் இத்தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அமைப்பு சார்பில் நீட் தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகள் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 21 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எதிர்கொள்ளவுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 4,162 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வு நாளை (மே.4ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக பன்னீர்செல்வம் பூங்கா அருகே காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை பவானி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி (ஐஆர்டிடி), கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரி என 12 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

Next Story