ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,199 பேருக்கு கொரோனா பாதிப்பு ‌

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,199 பேருக்கு கொரோனா பாதிப்பு ‌
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 383 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,220 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்தநிலையில் இன்று 1,199 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் சுமார் 200 பேருக்கு கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 607 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 037 பேர் குணமடைந்து உள்ளனர். இன்று மட்டும் 631 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.

தற்போது 6 ஆயிரத்து 848 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் நேற்று 72 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மொத்த உயிரிழப்பு 722 ஆக உயர்ந்தது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு