ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,127 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,127 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 1,127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 33 பேருக்கு பரிசோதனை செய்ததில் 1,198 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 1,127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 4 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 997 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 498 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 725 ஆக உள்ளது. தற்போது தொற்று உள்ள 8 ஆயிரத்து 781 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்