ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மது விற்ற 11 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மது விற்ற 11 பேர் கைது
X

கைது (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று அரசு உத்தரவை மீறி மது விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுதந்திர தினத்தையொட்டி, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் மதுவிற்பனைக்கு அரசு தடைவிதித்திருந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

அதன்படி தடையை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களை கண்காணிக்க ஈரோடு, கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

காவல்துறையினர் நடத்திய சோதனையில், மது விற்பனையில் ஈடுபட்ட அறச்சலூர் காங்கயம் சாலையை சேர்ந்த ராஜன் (47), புளியம்பட்டி, மாதம்பாளையத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (27), கவுந்தப்பாடி, மருத்துவமனை வீதியை சேர்ந்த பூபதி (53), சிறுவலூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த சின்னய்யா (43), கருப்பையா (30), அந்தியூர் பெருமாபாளையம் ராஜ் கண்ணு (30), ஆண்டிபாளையம் வெள்ளிங்கிரி (58), பவானி, பூலப்பாளையம் குணசேகரன் மகன் அஜய் (19) உள்ளிட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture