பங்களாப்புதூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

பங்களாப்புதூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

கலைவாணி.

பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி கணக்கம்பாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த கணக்கம்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் . இவருடைய மனைவி மலர். இவர்களுக்கு அபிமன்யூ (வயது 16) என்ற மகனும், கலைவாணி (வயது 15) என்ற மகளும் உள்ளனர்.. இதில் கோபி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அபிமன்யூ பதினோராம் வகுப்பும், கலைவாணி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று வீட்டில் கலைவாணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டதும் அக்கம்பக்கத்தினர் கலைவாணியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கலைவாணி ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கலைவாணி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, எனினும் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!