பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை: எம்எல்ஏ துவக்கி வைப்பு
108 ஆம்புலன்ஸ் சேவையினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவம் சார்ந்த உதவிகளைப் பெறுவதற்கும், உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்லவும் மிகவும் சிரமப்பட்டனர்.
இது சம்பந்தமாக அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கிழக்கு மலைப்பகுதிக்கு புதிய 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தித் தர வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கோரிக்கையாக முன் வைத்தார்.
இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, பர்கூர் கிழக்கு மலைப் பகுதியில் உள்ள தேவர்மலையில் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் இன்று காலை அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், தேவர் மலையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu