ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 854 பேருக்கு பரிசோதனை செய்ததில் 1,127 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.
இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, புதிதாக 1,070 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 28 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,042 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 540 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 725 ஆக உள்ளது. தற்போது தொற்று உள்ள 8 ஆயிரத்து 763 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu