கவுந்தப்பாடி அருகே தங்க நகை என நினைத்து மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்து சென்ற வாலிபர்

கவுந்தப்பாடி அருகே தங்க நகை என நினைத்து மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்து சென்ற வாலிபர்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே தங்க நகை என நினைத்து மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கவுந்தப்பாடி அருகே தங்க நகை என நினைத்து மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி காஞ்சிகோவில் ரோடு, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 64). இவருக்கு சொந்தமான பழைய வீடு கிருஷ்ணாபுரம் ஈரோடு ரோடு, காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ளது.

அங்கு, 3 சென்ட் இடத்தில் சரஸ்வதி பல்வேறு வகையான பூச்செடிகளை பராமரித்து வளர்த்து வருகிறார். தினமும் மாலை பூச்செடிகளுக்கு சரஸ்வதி தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். நேற்று மாலையும் வழக்கம்போல் சரஸ்வதி பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் சரஸ்வதி வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சரஸ்வதியிடம் முகவரி கேட்பது போல் அவர் அருகே வந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அந்த வாலிபர் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி திருடன் திருடன் என கத்தினார்.

அவரது சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அந்த வாலிபர் தான் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

அப்போது, தான் மர்மநபர் பறித்து சென்றது தங்கச் நகை இல்லை கவரிங் நகை என தெரிய வந்தது. எனினும் திருட்டு போன தனது கவரிங் நகையை மீட்டு தரக்கோரி அவர் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Similar Posts
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் அமைச்சர்கள் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் வரும் 8ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
அந்தியூர் அருகே பர்கூரில் குப்பையில் கிடந்த பாட்டில் வெடித்து பள்ளி மாணவன் படுகாயம்
பவானி: அம்மாபேட்டை அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
நடப்பாண்டில் ஈரோட்டில் இன்று முதல்முறையாக 101.84 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு
கவுந்தப்பாடி அருகே தங்க நகை என நினைத்து மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்து சென்ற வாலிபர்
தாட்கோ மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்
கோபி அருகே கூகலூரில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு மற்றும் மோதல்
ஈரோடு, மொடக்குறிச்சியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு
அந்தியூர் அருகே பர்கூர் தாமரைக்கரை ரேஷன் கடையில் கைரேகையை பதிவு செய்ய காத்திருக்கும் மலைவாழ் மக்கள்
ஈரோடு: அத்தாணியில் பாஸ்ட் புட் கடை தொழிலாளிக்கு காதில் அரிவாள் வெட்டு: 3 இளைஞர்கள் கைது
மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறையில் ரூ.7.48 கோடியில் பொன்மஞ்சள் குறுங்குழும தொழிற்சாலை:  ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு