பவானி அருகே சதித்திட்டம் தீட்டிய கும்பல் சுற்றிவளைப்பு

பவானி அருகே சதித்திட்டம் தீட்டிய கும்பல் சுற்றிவளைப்பு
X

பவானி அருகே சதிதிட்டம் தீட்டியபோது போலீசிடம் சிக்கிய கும்பல்

பவானி அருகே சதித்திட்டம் தீட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட சேலம்&கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோணவாய்க்கால் தண்ணீர்தொட்டி அருகே சில இளைஞர்கள் சந்தேகத்திற்குரிய வகையில், நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்ததை போலீசார் மறைந்திருந்து கேட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது நின்று கொண்டிருந்த இளைஞர்கள் ஆர்என் புதூர் பகுதியில் சூர்யா நகரில் உள்ள குடியிருப்பில் யாரவது வீட்டில் கொள்ளை அடிக்கலாம் என்றும். அங்கு யாரவது இருந்தால் அங்கேயே அவர்களை முடித்துவிட்டு கொள்ளை அடித்துவிடலாம் என பேசிகொண்டு இருந்துள்ளனர்.

அப்போது மறைந்திருந்த போலீசார் இளைஞர்கள் ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுடபோகிறார்கள் சந்தேகித்து சித்தோடு போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க எண்ணிய 9 பேரில் இருவர் தப்பியோடிவிட்டனர். இதன் பின்னர் 7 பேரை பிடித்து போலீசார் விசாரனை செய்ததில் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, சங்ககிரி பகுதியை சேர்ந்த பார்த்திபன், திண்டுகல் மாவட்டம் நல்லாம்பட்டி மற்றும் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜீ, அய்யனார், தமோதிரன், மணிகண்டன், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!