தீபாவளிக்கு ஜவுளி, இனிப்பு, பட்டாசு, தங்கம் விற்பனை ரூ.60,000 கோடி
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதாக தெரியவந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த தீபாவளிக்கு மாநிலம் முழுவதும் சுமார் ரூ.27 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை நடந்திருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இனிப்பு, கார பலகாரங்கள் விற்பனை சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை நடந்ததாக கூறப்படுகிறது. உளூந்தூர் பேட்டை, திருச்சி சமயபுரம், கோவில்பட்டி அடுத்த எட்டயபுரம், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர், சேலம் மாவட்டம் வீரகனூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
தங்கம் விற்பனையை பொருத்தவரை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம் மட்டுமின்றி, வைரம், பிளாட்டினம், வெள்ளி விற்பனையும் சேர்த்து சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு நடந்ததாக கூறப்படுகிறது.
பட்டாசு விற்பனை ரூ.6,000 கோடி: நாடு முழுவதும் பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், நாடு முழுவதும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்த 90 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள் விற்பனையாகி விட்டன. ரூ.6,000 கோடிக்கு மேல் பட்டாசு வர்த்தகம் நடைபெற்றதாக வரும் தகவலால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu