திண்டுக்கல் மாவட்டச் செய்தித் துளிகள்

திண்டுக்கல் மாவட்டச் செய்தித் துளிகள்
X
திண்டுக்கல்லில் மாநகராட்சி சார்பில் வரி வசூல் மையங்கள் திறக்கப்படுகின்றன

திண்டுக்கல் மாநகராட்சியில், 4 இடங்களில் வரி வசூல் மையங்கள் திறக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி 4 மண்டலங்களிலும் தலா ஒரு மையம் அமைக்கப்படுகிறது. அந்த வகையில், நாகல்நகர், ரவுண்டுரோடு, பேகம்பூர், ஆர்.எம்.காலனி ஆகிய 4 இடங்களில் மாநகராட்சி வரிவசூல் மையம் திறக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்லாமல், அந்த மையங்களிலேயே சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை எளிதாக செலுத்தி கொள்ளலாம். இதையொட்டி, வரிவசூல் மையங்களை திறப்பதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது:

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதில் கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கும், இலகுரக வாகனங்களுக்கும் ஒருமுறை, பலமுறை பயன்பாட்டிற்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பலமுறை பயன்பாட்டிற்கான மாதாந்திர கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

திண்டுக்கல்லில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த பெண் உட்பட 5 பேர் கைது, 85 மதுபானம் பாட்டில்கள் பறிமுதல்:

திண்டுக்கல் சிறுமலை மற்றும் நேருஜி நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த தங்கப்பாண்டி(42), சுப்பையா(45), நாகராஜ், உலகநாதன்(56) , ஜெயா(48) ஆகிய 5 பேரை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ராஜபுஷ்பா, சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து 85 மதுபான பாட்டில்களை பறிமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!