மதுபான கடை திறப்பதை கண்டித்து கொட்டும் மழையில் சாலை மறியல்

மதுபான கடை திறப்பதை கண்டித்து கொட்டும் மழையில் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதியதாக மதுபான கடை திறப்பதை கண்டித்து குட்டத்துப்பட்டி கிராம மக்கள் கொட்டும் மழையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டத்துப்பட்டி அன்னை நகருக்கும், பெரியார் நகருக்கும் இடைபட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் புதியதாக அரசு மதுபான கடை திறப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இப்பகுதி பொதுமக்கள் தங்களது பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை தேவை இல்லை. ஏற்கனவே இப்பகுதி மக்கள் அனைவரும் விவசாயத்தை இழந்து வெளியில் பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

அரசு மதுபானக்கடை திறந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் மதுபான பிரியர்களால் பாதிப்பும் ஏற்படும். ஆகவே எங்களது பகுதியில் மதுபானக்கடை தேவையில்லை என காலை 8 மணி முதல் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு குட்டத்துப்பட்டி, இந்திரா நகர், அன்னை நகர், பெரியார் நகர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!