திண்டுக்கல் மாநகராட்சியில் சாலையில் திரியும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை

திண்டுக்கல் மாநகராட்சியில் சாலையில் திரியும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை
X

திண்டுக்கல் மாநகராட்சிப்பகுதியில் தெரு நாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை இங்கே காணலாம்

திண்டுக்கல்லில் மாநகராட்சி சார்பாக நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் அதிகமாக தொல்லை செய்வதாக மாநகராட்சி ஆணையருக்கு ரவிச்சந்திரன் அவர்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில்,மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, முகமது அனிபா, செல்வராணி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள்பேகம்பூர், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும், நாய்கள் பிடிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கொசவபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன்(52) .இவர், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் முருகன் மீது ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தலைமை ஆசிரியர் முருகனை பணியிடை நீக்கம் செய்து, திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்