மாணவ, மாணவிகளுக்கு, உரிய நேரத்தில் பாடப் புத்தகம்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக, பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் இறுதிகட்ட பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,983 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 3 லட்சத்து 45 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்தனர். எனவே, இந்த கல்வி ஆண்டுக்கு 3½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுகள் ஏற்கெனவே வந்துவிட்டன.
இறுதிகட்டமாக பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்தது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலக கிடங்குகளில் இருந்து வாகனங்களில் பாடப் புத்தகங்களை ஏற்றி பள்ளிகளுக்கு அனுப்பினர். பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவ, மாணவியர்களுக்கு பாடப் புத்தகம், நோட்டுகளை, கல்வி நிர்வாகம் உரிய நேரத்தில் வழங்கும்.
தமிழகத்தில் கோடைவிடுமுறை முடிந்து வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதையொட்டி பள்ளிகளை சுத்தம் செய்து, கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கும் நாளில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்களை வழங்கும்படி அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே மாவட்ட வாரியாக மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த பாடப்புத்தகங்கள் தேவைக்கேற்ப பள்ளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதில் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கிடங்கில் இருந்தும் பாடப்புத்தகங்கள் மினிலாரியில் ஏற்றப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. மேலும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் சென்றடைந்ததை கல்வி அதிகாரிகள் ஆய்வு மூலம் உறுதி செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu