திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு தீவிர கண்காணிப்பு: எஸ்.பி. தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு தீவிர கண்காணிப்பு: எஸ்.பி.  தகவல்
X

திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட 17 கிராமங்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, 17 கிராமங்களில் மதுவிலக்கு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில், கள்ளச்சாராயத்தை தடுக்க பல்வேறு பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மலையடிவாரம் மற்றும் ஓடைப்பகுதிகளுக்கு அருகே இருக்கும் கிராமங்களில் திடீர் சோதனை நடத்துகின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட 17 கிராமங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்த கள்ளச்சாராய வேட்டையில் மதுவிலக்கு போலீசாருடன் கலால்துறை அதிகாரிகளும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!