திண்டுக்கல்லில் சாலையில் சுற்றித் திரிந்த நாய்களைப்பிடிக்க நடவடிக்கை
திண்டுக்கல் நகரில் தெரு நாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்
திண்டுக்கல்லில் மாநகராட்சி சார்பாக நாய் பிடிக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் அதிகமாக தொல்லை செய்வதாக மாநகராட்சி ஆணையருக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, முகமது அனிபா தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் ஒய்.எம்.ஆர்.பட்டி, ரவுண்ட் ரோடு மாநகராட்சி பகுதிகளில், நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நத்தத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளான அண்ணாநகர், கோவில்பட்டி, கொண்டையம்பட்டி, செட்டியார்குளத்தெரு, அய்யாபட்டி, ஆவிச்சிபட்டி,நடுவனூர், சமுத்திராப்பட்டி,ஊராளிபட்டி எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 16ந் தேதி ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
இந்த சிலைகள் நேற்று வாகனங்களில் மேளதாளம் முழங்க எடுத்துவரப்பட்டு நத்தம் கோவில்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதிகளில் ஒன்று சேர்ந்தது. அங்கிருந்து 33க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டு பஸ் நிலையம், மூன்று லாந்தர், அவுட்டர் வழியாக அம்மன்குளம் சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி நத்தம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக தாசில்தார் ராமையா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் காவல் துணை கண்காணிப்பாளர் உதயகுமார்,ஆய்வாளர் தங்க முனியசாமி உள்ளிட்ட சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாணார்பட்டி அருகே இலவச பொது மருத்துவ முகாம்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் இக்ரஃஹ் இஸ்லாமிய கல்வி,சேவை அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல் ஷிபா பொதுநல மருத்துவமனை இணைந்து நடத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இக்ரஹ் இஸ்லாமிய கல்வி, சேவை அறக்கட்டளை தலைவர் மெளலவி பதுருதீன் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது.முகாமினை திண்டுக்கல் மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் துவக்கி வைத்தார்.இதற்கு திமுக.மாநில பொதுக்குழு உறுப்பினரும் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா வழக்கறிஞர்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஹம்ஜா,சாணார்பட்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் ராமதாஸ், திண்டுக்கல் ஆமினா லெதர்ஸ் அப்துல்ரஹீம், திண்டுக்கல் ஷிபா மருத்துவமனை மருத்துவர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் பரிசோதனை,இசிஜி பரிசோதனை, இரத்தம்,சிறுநீர், இரத்த அழுத்தம், பொதுமருத்துவம்,தாய்சேய் நலம்,காது,மூக்கு,தொண்டை, கண்,பல்,தோல், எலும்பு மூட்டு, காசநோய், தொழுநோய் போன்றவற்றிற்கு பரிசோதனை செய்து சிகிச்சைகள் அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
முகாமில் 300.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.இதில் நத்தம் பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில்ஸ வழக்கறிஞர் மருநூத்து, ஒன்றிய கவுன்சிலர் ஆண்டிச்சாமி, திண்டுக்கல் ஷிபா மருத்துவமனை மருத்துவர்கள் ஹமீதுபாரூக்,சலீமா,முகமது அஷ்ரப் அலி,சாணார்பட்டி திமுக ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது:
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் முருகேசன் என்பவரை கடந்த 2-ம் தேதி அருண்குமார் (32) என்பவர் பீர்பாட்டிலால் தாக்கியது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அருண்குமாரின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரையின்படி, ஆட்சியர் பூங்கொடி, அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து வேடசந்தூர் போலீஸார் அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu