திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரன்(29). என்பவரை கடந்த ஜூலை 23-ம் வெட்டி படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் இருக்கும் பங்க் மணி (எ) மணிகண்டன்(27), தினேஷ்(27), ராசு(எ)ராஜ்(23), சுள்ளான் மாதவன் (எ) மாதவன்(27), ஸ்ரீரங்கன்(27), உதயகுமார்(19). ஆகிய 6 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள் ஆறு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து , தாலுகா காவல்துறையினர் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
வேடசந்தூரில் தனியார் பஸ்சை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது:
ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. பேருந்தை ஆயக்குடியைச் சேர்ந்த கதிரேசன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துநராக சாமியார் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் (29) என்பவர் இருந்தார். வேடசந்தூர் வந்ததும் நடத்துநர் செல்வராஜ் அங்கிருந்த டீக்கடைக்கு நடந்து சென்றார்.அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் செல்வராஜ் மீது மோதுவது போல வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர் சுதாரித்து நகர்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் ஆட்டோ டிரைவருக்கும், செல்வராஜூக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அந்த கும்பல் செல்வராஜை கடுமையாக தாக்கி விட்டு சென்றனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதனையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஒரு கும்பல் அந்த தனியார் பேருந்தை வழி மறித்து தாக்கினர். . இந்த தாக்குதலில் பேருந்தின் பக்க வாட்டு கண்ணாடிகள் உடைந்து மூவர் காயமடைந்தனர்.
இது குறித்து வேடசந்தூர்காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காளனம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவீன்பாரதி (20), வேடசந்தூரைச் சேர்ந்த விக்ரம் (21). டி.அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கருணாகரன் (20) ஆகிய மூவரை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu