/* */

தர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பல மாதங்களாக தண்ணீர் இன்றி தவித்து வரும் நிலையில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார்

HIGHLIGHTS

தர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு  கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது ஜர்க்கான் கொட்டாய் மற்றும் காராஜ் நகர் குடியிருப்பு கிராமங்கள். இந்த இரு கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

இரு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேலாகியும், சம்மந்தப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம், இரு கிராமத்தை சேர்ந்த குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் வழங்கப்படாமல், கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

இதனால் இரு கிராமங்களை சேர்ந்த மக்கள், குடிநீருக்காக, பல கிலோமீட்டர் தூரம், மாற்று கிராமங்களுக்கு நாள்தோறும் நடந்தே சென்று, குடங்களில் குடிநீர் எடுத்துவரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

குடிநீர் இல்லாமல் தவிக்கும், இரு கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு பணிக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும், உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் நாள்தோறும் தவித்து வந்தனர்

பல லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட, இரு கிராமங்களில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம், குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்ககோரி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சம்மந்தப்பட்ட இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், காலிகுடங்களுடன் ஒன்று திரண்டு, சம்பந்தப்பட்ட இரு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் முன்பு குடிநீர் வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து, காலிகுடங்களுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரு கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்தும், குடிநீர் வழங்க கோரி கிராமமக்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 2 Jan 2024 4:06 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!