தீர்த்தமலையில் கிரிவலப்பாதை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
அவரவர் கர்ம வினைப்படியே, நோய்கள் மனிதர்களை தாக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. என்றாலும் இறைவனிடம் நாம் செய்யும் பிரார்த்தனையின் பலனாக, நோய்கள் தீரக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பையும் ஆலயங்கள் மூலமாக இறைவன் நமக்கு வழங்கி இருக்கிறான் என்றால் அது மிகையில்லை.
அப்படி ஒரு நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலம் தான் தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் நீங்குகின்றன என்பது பக்தர்கள் நம்பிக்கை
இது ஒரு மூலிகை மலை என்பதால் இத்தலத்து இறைவனை வழிபட்டால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் பக்தர்களின் அணைத்து விதமான குறைகளும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீர்த்த மலையில் தீர்த்த கிரீஸ்வரர் கோவிலில் செயல்படுத்தப்படும் மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலுக்கு பழங்காலத்தில் கிரிவலப்பாதை இருந்ததாகவும், தற்போது பயன்பாட்டில் இல்லை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தீர்த்தமலையில் ஏற்கனவே இருந்த கிரிவலப்பாதை குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டு, சாத்தியகூறுகள் இருந்தால் அந்த பாதையை மீண்டும் புதுப்பித்து தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
தீர்த்தமலை தீர்த்தகி ரீஸ்வரர்க்கோயிலில் ரூ.2.50 கோடியில்பணிகள் நடைபெறுகிறது. இந்தப் பணிகள் இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் நிறைவுபெறும். தொடர்ந்து தீர்த்தகிரீஸ்வரர்கோயிலில் நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும். தீர்த்தமலையில் உள்ள மலைக்கோயிலுக்கு செல்வதற்கு மலைப்பாதை அமைப்பதற்காக வனத்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. வனத்துறையினரிடம் இருந்து உரிய அனுமதி கிடைத்தவுடன் தீர்த்தமலை மலைக்கோயிலுக்கு பாதை வசதி ஏற்படுத்தப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வரும் வகையில் இணைப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்ட செயலருமான பி.பழனி யப்பன், கிழக்கு மாவட்ட செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu