தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம்

தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம்
X

இனிப்பு தயாரிக்கும் பணி

தர்மபுரியில் தீபாவளிக்கு இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிக ஆர்டர்கள் கிடைத்ததால் உற்பத்தியாளார்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, இனிப்பு பலகாரங்கள். இதனால் தீபாவளி பண்டிகை கொண்டாடுபவர்கள் தங்களது வீடுகளில் இனிப்பு பலகாரங்கள் செய்து, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுகின்றவர்க ளுக்கு அந்தந்த நிறுவனங்களில் தீபாவளிக்கு பட்டாசு மற்றும் இனிப்புகளை பரிசாக வழங்கி வருகின்றனர்.

இதற்காக சிலர் பேக்கரிகள்அமைத்து தனியாக இனிப்புகள் தயாரிப்பதும், பேக்கரிகள் தீபாவளிக்கு என்று பல்வேறு சிறப்பு ரகங்களில் இனிப்புகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தர்மபுரியில் பல்வேறு இடங்களில் தீபாவளி பண்டிகைகளுக்கு விதவிதமான வகையில் இனிப்பு பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் தனியார் திருமண மண்டபங்களில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இனிப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படுகின்ற இனிப்பு பலகாரங்கள் சேலம், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சென்னை போன்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் பெரிய நிறுவனங்கள் போன்றவற்றிற்கு ஆர்டரின் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி இன்னும் 2 நாட்கள் இருக்கின்ற நிலையில் தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு பலகாரங்கள் செய்யும் பணியும், வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் மைசூர் பாக், பாதுர்ஷா, சோன்பப்படி, லட்டு, நட்ஸ் லட்டு, அல்வா, முந்திரி மற்றும் கேரட் அல்வா, முந்திரி கேக், பாதாம் கேக், குலோப் ஜாமூன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையிலான இனிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் வாடிக்கையாளர்களை கவருகின்ற வகையில், கொய்யா, வாட்டர் ஆப்பிள், சிறிய துப்பாக்கி தோட்டாக்கள் போன்ற வடிவங்களில் பல வண்ணங்களில் ரசாயனம் இல்லாமல் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ இனிப்புகள் ரூ. 300 வரையிலும், முந்திரி, நெய் போன்றவற்றில் தயாரிக்கப்படும், ஸ்பெஷல் இனிப்பு பலகாரங்கள் கிலோ ரூ. 500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த ஆண்டு தீபாவளியை காட்டிலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகப்படியான இனிப்புகள் ஆர்டர் கிடைத்துள்ளதாகவும், இந்த தீபாவளி பண்டிகையில் நல்ல லாபம் கிடைத்திருப்பதாகவும் இனிப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!