ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிா்வாகம் தடை

ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிா்வாகம் தடை
X

ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு காவிரி ஆற்றில் புனித நீராடி ஆற்றுநீரை தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். மேலும் தமிழகத்தில் காவிாி கால்பதிக்கும் இடமாகவும் உள்ளது. படகு சவாாி, ஐந்தருவி, மீன் குழம்பிற்கு பெயா் பெற்ற இந்த சுற்றுலா தலத்திற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கா்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புாிவாா்கள்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் பகுதிக்கு செல்ல தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து போக்குவரத்து காவல்துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆறு சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்டு அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இருந்தது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு அதிகமான வாகனங்களில் வரத்தொடங்கினர். செக்போஸ்டில் காவல்துறையினர் அனுமதிக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எந்த ஒரு அறிவிப்பும் வராததால் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க காவல்துறையினா் மறுக்கின்றனா். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனா்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil