பாெதுமக்களுக்கு தடை விதிப்பு; ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய ஒகேனக்கல்

பாெதுமக்களுக்கு தடை விதிப்பு; ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய ஒகேனக்கல்
X

கொரோனோ தடை உத்தரவால் ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய ஒகேனக்கல்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடை விதித்ததால் ஆடிப்பெருக்கில் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆடி 18ம் நாள் காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை புரிவார்கள். மேலும் ஆடிப்பெருக்கு அன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் காவிரியில் புனித நீராடி புத்தாடை உடுத்தி, அங்குள்ள காவிரி அம்மனை வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல் வருவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒகேனக்கல் சுற்றுலா தலம் பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் ஒகேனக்கலில் 3 நாட்கள் அரசு விழாவாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஒகேனக்கல் வருபவர்களை தடுக்க பென்னாகரம்-ஒகேனக்கல் சாலையில் 3 இடங்களில் சோதனை சாவடி அமைத்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவிரிக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களை தடுத்து அனுமதி இல்லை என கூறி காவல் துறையினர் திருப்பி அனுப்புவிடுகின்றனர்.

இன்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் வரத்தும் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture