ஏரியூர் அருகே கணவர் சாவில் மர்மம்; போலீசாரை கண்டித்து மனவைி சாலை மறியல்

ஏரியூர் அருகே கணவர் சாவில் மர்மம்;  போலீசாரை கண்டித்து மனவைி சாலை மறியல்
X

கணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மனைவி ஏரியூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஏரியூர் அருகே கணவர் சாவில் மர்மம் இருப்பதாக அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மனைவி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள நெருப்பூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (46), விவசாயி. இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த ஓராண்டாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து இராம கொண்ட அள்ளியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஆசைத்தம்பி நேற்று மாலை இறந்துவிட்டார். தகவல் அறிந்த மனைவி, கணவனின் வீட்டிற்கு சென்று அவனது உடலை காண முற்பட்டார். அப்போது ஆசைதம்பியின் சகோதரனும் அவரது மனைவியும் கவிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கவிதா ஏரியூர் காவல் நிலைத்தில் தனது கணவனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், தன்னைத் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து ஏரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று பிரேதத்தை வாங்க மறுத்து, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, ஏரியூர் காவல் நிலையம் முன்பு கவிதா மற்றும் கவிதாவின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சௌந்தர்ராஜன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், கவிதா மற்றும் அவரது உறவினர்கள் கலைந்து சென்றனர்.

கணவரின் உடலைக் காண வந்த மனைவியை தாக்கிய, கணவனின் உறவினர்களின் செயலால் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டதும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதும் ஏரியூர் சுற்றுவட்டார பகுதியில் அடுத்தடுத்து பரபரப்பு நிலவியது.

Tags

Next Story