பென்னாகரத்தில் கொரோனா தடுப்புப்பணி: ஜி.கே.மணி எம்எல்ஏ ஆலோசனை
கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து, பாமக மாநிலத்தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி தலைமையில் ஆலோசனை கூட்டம், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோகம், வட்டார வளர்ச்சி பணிகள் தொடர்பாக, அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில், ஒன்றியக்குழு தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், துணைத்தலைவர் அற்புதம் அன்பு, மாவட்ட கவுன்சிலர் குட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், வடிவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், சண்முகம், சக்திவேல், சாக்ரடீஸ், ஒன்றிய பொறியாளர்கள் சீனிவாசன், சுரேஷ்குமார், மாலதி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மலர்விழி, சுரேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu