ஒகேனக்கல்லுக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வரத்து

ஒகேனக்கல்லுக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வரத்து
X

ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.

கிருஷ்ணசாகர் மற்றும் கபினியில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரத்து 458 கன அடியாக உள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி ஆகும். தற்போதைய நீர் மட்டம் 120.14 அடியாக உள்ளது. தற்போது நீர்வரத்து 8656 கன அடி ஆகும். இதில் 2000 கன அடி வெளியேற்றப்படுகிறது. கபிணி அணையின் மொத்த கொள்ளளவு 84.00 அடி ஆகும். தற்போதைய நீர் மட்டம் 83.12 அடியாக உள்ளது. நீர்வரத்து 5373 கன அடி. நீர் வெளியேற்றம் 5458 கன அடி ஆகும்.

இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரத்து 458 கன அடியாக உள்ளது. இதனை தொடர்ந்து ஒகேனக்கல் காவிரியில் பிலிகுண்டு பகுதியில் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!