புதுபட்டியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற பெண் கைது

புதுபட்டியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற பெண் கைது
X

பைல் படம்.

புதுபட்டியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த பெண்னை கைது செய்து அவரிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் அரூர் போலீஸ் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா மேற்பார்வையில் ஏ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிவபெருமான் இன்று பிற்பகல் சேர்ச் புதுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த வசந்தா (வயது 54) என்ற பெண் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்களை மறைத்து வைத்து கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai marketing future