கிளைக் கால்வாயில் வாணியாறு அணை தண்ணீர் விட மக்கள் கோரிக்கை

கிளைக் கால்வாயில் வாணியாறு அணை தண்ணீர் விட மக்கள் கோரிக்கை
X

பைல் படம்.

கிளைக் கால்வாயில் வாணியாறு அணை தண்ணீர் விட மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை நிரம்பி கடந்த பிப்,10ல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 10,517 ஏக்கர் பாசன வசதி பெற்றது.

ஆனால் வெங்கடசமுத்திரம், மோளையானூர், தேவராஜபாளையம், விழுதப்பட்டி ,மெனசி வழியாக தண்ணீர் செல்கிறது. ஆனால் இந்த இடதுபுற கால்வாயில் விழுதிப்பட்டி அருகே அப்புகல் மலையடிவாரத்தில் ஒரு கால்வாய் பிரிந்து செல்கிறது. இதில் அணை கட்டியதிலிருந்து இதுவரை மூன்று முறை மட்டுமே தண்ணீர் வந்துள்ளது.

இந்த கால்வாய் மராமத்து பணி செய்யப்படாததால் இந்தபகுதி விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த கால்வாயில் தண்ணீர் வந்தால் சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ஆனால் பொதுப்பணித்துறையினர், இந்தக் கால்வாயை தூர்வாரப்படாததால் பல ஆண்டுகளாக இந்த வாய்க்காலில் தண்ணீர் விடுவதில்லை. தற்போது வீணாக உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டு கடலில் சென்று கலக்கிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து இக்கிளை கால்வாயில் தண்ணீர் விடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்