பாப்பிரெட்டிப்பட்டி அருகே பால் சொசைட்டி செயலாளர் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பால் சொசைட்டி செயலாளர் மாயம்
X

பைல் படம்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சொசைட்டி செயலாளர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூத நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் , வயது31. இவர் பூதநத்தம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று முன் தினம் இரவு பால் சொசைட்டிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!