பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு: 3 பேர் மீது வழக்குப்பதிவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு: 3 பேர் மீது வழக்குப்பதிவு
X

கோப்பு படம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு தொடர்பாக, 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோம்பூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை.80.விவசாயி. அப்பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலம் சம்பந்தமாக, அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்திற்க்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது .

இந்த நிலையில், வெங்கடாசலம், அவரது மகன்கள் மாதேஷ், மாது ஆகிய மூவரும் சேர்ந்து, அண்ணாமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அண்ணாமலை தரப்பினரின் புகாரை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!