கடத்தூர் பேரூராட்சியில் கால்வாய் சீரமைப்பு பணியை ஆய்வு செய்த அதிகாரி

கடத்தூர் பேரூராட்சியில் கால்வாய் சீரமைப்பு பணியை ஆய்வு செய்த அதிகாரி
X

கடத்தூர் பேரூராட்சியில், ஆய்வின் போது, தர்மபுரி மண்டல உதவி இயக்குனர் கண்ணன் மரக்கன்று நட்டார்.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஏரிக்கு நீர் வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சியில், மின்வாரிய அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஏரி, சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு மழை பெய்தால் பொதியன்பள்ளத்தில் இருந்து தண்ணீர் வரும். இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்க்கும், விவசாயத்திற்க்கும், ஏரி நீர் பயனாக அமைகிறது.

ஆனால் தண்ணீர் வரும் வழி, முழுமையாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர, தேசிய பசுமை தீர்பாய திட்டத்தின் கீழ், கால்வாய் சீரமைப்பு பணி மேற்கொள்வதற்காக தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர், பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்து, அனைத்து வார்டுகளிலும் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார், இன்ஜினியர்கள் முருகன், ராஜா உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future