பாப்பிரெட்டிப்பட்டி அருகே தற்கொலைக்கு தூண்டிய கணவன், மாமியார் கைது

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தற்கொலைக்கு தூண்டியதாக கணவன், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தேவராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவபிரசாந்த், வயது 29. இவர் பாப்பிரெட்டிப்பட்டி யில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்த பூர்ணிகா,வயது 19. என்பவருக்கும் கடந்த 9, மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 ந் தேதி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த பூர்ணிகா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூர்ணிகா ,7 மாத கர்ப்பிணியாக இருந்ததும், திருமணம் ஆகி 9 மாதமே ஆனதால் அரூர் கோட்டாட்சியர் முத்தையன் விசாரணை நடத்தினார்.

பூர்ணிகாவின் பெற்றோர் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் பூர்ணிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சிவபிரசாந்த் ,வயது 27. மாமியார் கவிதா வயது,50. ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்