பாப்பிரெட்டிப்பட்டியில் மின் ஊழியர் பணியின் போது பலி: உறவினர்கள்போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டியில் மின் ஊழியர் பணியின் போது பலி: உறவினர்கள்போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டியில் மின் ஊழியர் பணியின் போது பலி: உறவினர்கள்போராட்டம்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் தேசிங்கு மகன் அசோக் குமார்( 28) . இவர் கடந்த 6 ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை அலமேலுபுரத்தில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இன்று காலை முதல் மாலை வரை உடலை வாங்க மறுத்தும், இழப்பீடு வழங்க கோரியும் உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் பார்வதி, அரூர் டி.எஸ்.பி( பொறுப்பு) ராஜா சோமசுந்தரம், மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பவுன் ராஜ், உதவி பொறியாளர் வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் இறந்தவரின் குடும்பத்திற்கு மின்சார வாரியத்துறையின் சார்பில் 5 லட்சம் ரூபாய், காப்பீட்டு தொகை 2 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் நிவாரண தொகை 2 லட்சம் ரூபாய் , வழங்கவும், இறந்த அசோக் குமாருக்கு, மின்சார வாரியத்தில் பணி செய்தமைக்கான சான்று மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க பரிந்துரை செய்தல் என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து உறவினர் போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்று சென்றனர்.இறந்த அசோக் குமாருக்கு தர்ஷினி என்ற ஐந்து வயது பெண் குழந்தையும், தர்ஷன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!