கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு

கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு
X

கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்

கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி அலுவலர்களுக்கு உத்தரவு

கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்ஷினி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்தும் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தலைமையில் (18.03.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகளை நிறைவேற்றிட அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், ஊரக வளர்ச்சி துறையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அறிவித்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். மேலும். குடிநீர் வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.96 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், மடதஅள்ளி ஊராட்சிக்கு ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், மடதஅள்ளி ஊராட்சியில் ரூ.17.98 இலட்சம் மதிப்பீட்டில் நாடார்புரம் வேடியப்பன் கோவில் முதல் கணவாய் குட்டை வரை புதிய சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் தரமாகவும், விரைவாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், கடத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.ரேணுகா, பி.கே.மகாலிங்கம், உதவி இயக்குநர் (தணிக்கை) / கண்காணிப்பு அலுவலர் முரளி கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெகதீஷ்குமார், இராமசந்திரன், உதவிப்பொறியாளர்கள் பி.கே.சண்முகம்,அகமத் பாஷா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி